“இலங்கையின் நெருக்கடிக்கு காரணம் பொருளாதாரத்தின் தவறான முகாமைத்துவமே”

0
195

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி இயற்கையாக ஏற்பட்ட நெருக்கடியல்ல, பொருளாதார தவறான நிர்வாகத்தின் விளைவாகும் என நேபாளம், மாலைதீவுகள் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஃபாரிஸ் ஹடாட் சர்வோஸ் தெரிவித்துள்ளார்.

இது மனிதனால் உருவாக்கப்பட்ட நெருக்கடி (Man made crisis) என்றும் இதன் காரணமாக வெளிநாட்டுக் கடன் பாரியளவில் குவிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2021 மற்றும் 2022 க்கு இடையில் இலங்கையில் வறுமை 13.1 வீதத்தில் இருந்து 25 வீதமாக இரட்டிப்பாகியுள்ளது என்றும் இந்த வருட இறுதிக்குள் (2023) வறுமை மேலும் 2.4 வீதத்தால் அதிகரிக்கும் என்றும் ஃபாரிஸ் ஹடாட் சர்வோஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பலர் வறுமையின் அதிர்ச்சியை உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here