இலங்கையின் முதலாவது மெட்ரோ பஸ் டிப்போ தலங்கமவில் திறப்பு!

0
37

நாட்டின் நகர்புற போக்குவரத்து சேவையை திறம்பட மாற்றி, பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மெட்ரோ பஸ் சேவைக்கான வசதிகள், பராமரிப்பு மற்றும் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்காக அமைக்கப்பட்ட முதலாவது டிப்போ முற்றம், பத்தரமுல்லை தலங்கம பிரதேசத்தில் நேற்று (04) சேவையை ஆரம்பித்தது.

புதிய டிப்போ மையத்தின் சேவைகள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன அவர்களின் தலைமையிலும், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்கவின் பங்கேற்புடனும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளை இலக்காகக் கொண்டு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள மெட்ரோ பஸ் சேவையின் செயற்பாடு மற்றும் பராமரிப்புக்காக முதலாம் கட்டமாக 4 புதிய பஸ் டிப்போக்களை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதில் முதலாவது டிப்போ இன்று தலங்கமவில் ஆரம்பிக்கப்பட்டது. ஏனைய டிப்போ மையங்கள் ஏகல, கடவத்த, இரத்மலான ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு இந்த மாதத்திலேயே சேவையை ஆரம்பிக்க உள்ளன.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை இணைத்து 10 பஸ்களுடன் 2 வழித்தடங்களில் மெட்ரோ பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு வழித்தடங்களுடன் மேலும் 5 புதிய மெட்ரோ வழித்தடங்கள் சேர்கப்பட்டுள்ளன. இந்த மாதம் முதல் 7 வழித்தடங்களில் சேவையை இயக்க Metro Transit (Pvt) Ltd நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Lanka Metro Transit (Pvt) Ltd நிறுவனத்திற்கு 2026 ஆம் ஆண்டில் 800 மில்லியன் ரூபாவும், 2027 ஆம் ஆண்டில் 267.5 மில்லியன் ரூபாவும் பங்கு மூலதனமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதி மூலம் சேவைகளை திறம்பட பேணுவதற்காக டிப்போக்களுடன் கூடுதலாக, ஏகல பிரதேசத்தில் முழுமையான மத்திய பராமரிப்பு மையம் ஒன்றும் ஆரம்பிக்கப்படும்.

மெட்ரோ பஸ் சேவைக்கு தேவையான நவீன தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, இந்த மாதம் மேலும் 112 பஸ்களை மெட்ரோ சேவையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Text – META

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here