இலங்கையில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான நேரக் கட்டுப்பாட்டில் திருத்தம்

0
153

இலங்கை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இசை நிகழ்ச்சிகளை இரவு 10 மணிக்கு நிறைவு செய்ய வேண்டும் என்ற நேரக் கட்டுப்பாட்டில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதன்படி, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இசை நிகழ்ச்சிகளை முடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடுகள் அதிகாலை 1.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில், இசை மற்றும் பிற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நள்ளிரவு 12.30 மணி வரை நடத்தலாம் என அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வழிபாட்டு தளங்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கும் இசை நிகழ்ச்சி நடக்கும் இடங்களுக்கு இடையே நியாயமான இடைவெளியை பேண வேண்டும் என்று அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here