கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற அமைதியின்மையைத் தொடர்ந்து ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றிய விவரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி நாடளாவிய ரீதியில் இதுவரை சுமார் 38 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் 65 வீடுகள் சேதமடைந்துள்ளன என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
47 வாகனங்கள் மற்றும் 38 வீடுகள் மொத்தமாக எரிக்கப்பட்டதாகவும் 41 வாகனங்கள், 65 வீடுகள் சேதமாக்கப்பட்டுதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேல் மாகாணத்தில் 6, தென் மாகாணத்தில் 2 என இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.