பல்வேறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 30 முதல் 40 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவி வரும் டொலர் பிரச்சினையினால் இவ்வாறு விலைகள் உயர்வடைந்துள்ளதாக ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பல்வேறு பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன.
அத்துடன் இன்றைய தினம் தினம் முதல் பேருந்து கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே கோவிட் தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊடரங்கு மற்றும் சில நடைமுறைகள் காரணமாக இலங்கையில் மக்கள் பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார ரீதியான சரிவு நிலை காரணமாக பொருட்களின் விலைகள் அதிலும் குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பாரியளவில் உயர்ந்துள்ளன.
ஏற்கனவே நெருக்கடி நிலையில் இருந்து வந்த நாட்டு மக்களுக்கு இந்த விலை உயர்வு மிகப்பெரும் அடியாக இருப்பதாக சமூக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.