இலங்கையில் பிரபல சுப்பர் மார்க்கெட்டில் கொடூரமாக தாக்கப்பட்ட பெண்(காணொளி)

0
113

இலங்கையில் பிரபலமான சுப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருட்கள் வாங்க வந்த பெண் ஒருவர் திருட்டு சம்பவம் தொடர்பில் அந்த நிறுவனத்தின் ஊழியர்களால் கொடூரமாக தாக்கப்படும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நிறுவனத்தின் ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் இணைந்து அந்த பெண்ணின் தலைமயிரைப்பிடித்து இழுத்து தாக்குவது காணொளியில் பதிவாகியுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான பெண் வேறொரு நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி என தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல் தொடர்பில் சந்தேக நபர்களை அடையாளம் காண காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் குறித்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்த நடத்தை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எமது நிறுவனத்தின் செயல்முறையுடன் இவ்வாறான செயல் ஒரு போதும் ஒத்துப்போகவில்லை என்பதால், குறிப்பிட்ட ஊழியர்களின் நடத்தை குறித்து நாங்கள் அதிர்ச்சியும் வெட்கமும் அடைகிறோம்.

https://web.facebook.com/100007561748991/videos/834508175348226/

தாக்குதலில் ஈடுபட்ட ஊழியர்களை இடைநிறுத்திவிட்டு விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம். எங்கள் வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறோம்.

தரமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதில் எங்களின் அர்ப்பணிப்பு தொடரும். உங்கள் புரிதலுக்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் நன்றி.” என தெரிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here