இலங்கையில் மீண்டும் கெடுபிடிகள்! பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்!

0
244

உள்நாட்டு போர்க்காலத்தில் தாக்குதல்களின் அச்சுறுத்தல் கொழும்பின் பல பகுதிகளை பதற்றநிலைக்கு மாற்றியது. அதேநிலை, இன்று அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் அறிவிக்கப்பட்டதும் மீண்டும் ஏற்பட்டுள்ளது.இந்த அறிவித்தலின்படி, அதியுயர் பாதுகாப்பு வலயங்களின் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்களுடைய நிரந்தர அல்லது தற்காலிக குடியிருப்பாளர்களின் பட்டியலை அந்தப் பகுதியின் காவல் நிலையப் பொறுப்பதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

பட்டியலில் மாற்றம் இருந்தால் 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்கப்பட வேண்டும். அரசுத் துறை அல்லது தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் பணியாளர்களின் பட்டியலைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்தநிலையில் குறித்த பிரதேங்களின் எந்தவொரு வளாகத்திலும் நுழைந்து சோதனையிட பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது.வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட உத்தரவுகளின் கீழ் குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்கு மேல் நீதிமன்றத்தினால் மட்டுமே பிணை வழங்க முடியும்.

வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் தொடர்பாக தண்டிக்கப்பட்டவர்கள் உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின் 26(2) பிரிவின் கீழ் ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவார்கள்.

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் இலங்கை தனது கடினமான தீர்மானத்தை எதிர்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here