இலங்கையில் முதல் முறையாக தாய் ஒருவர் ஒரே நேரத்தில் 6 குழந்தைகள் பெற்றெடுத்துள்ளார்.

0
240

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் இன்று காலை குறித்த பெண் இந்த குழந்தைகளை பெற்றுள்ளார்.

பேராசிரியர் ரிடான் டயஸின் தலைமையில் இடம்பெற்ற சிஸேரியன் சத்திர சிகிச்சை ஊடாக இந்த குழந்தைகள் பிறந்துள்ளன.

இன்று அதிகாலை 12.16 – 12.18 காலப்பகுதியில் குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளது. மூன்று பெண் பிள்ளைகளும் மூன்று ஆண் பிள்ளைகளுமே பிறந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

31 வயதுடைய தாயும் 6 குழந்தைகளும் சிறந்த உடல் நலத்துடன் இருப்பதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவர்களில் இரண்டாவது பிறந்த குழந்தை மாத்திரம் தற்போது வைத்தியர்களின் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குழந்தையின் பெற்றோர் கொழும்பு, அங்கொடை பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here