இலங்கையில் மூடப்படும் மிகப்பெரிய நிறுவனம்: 1000 பேர் வேலை இழக்கும் அபாயம்!

0
192

மினுவாங்கொடையில் அமைந்துள்ள Brandix நிறுவனத்திற்கு சொந்தமான Brandix Incubator தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிறுவனம் மூடப்படுவதால் கிட்டத்தட்ட 1000 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதே நிர்வாக உத்தியோகத்தர், முன்னர் Brandix நிறுவனத்திற்குச் சொந்தமான கஹவத்தை மற்றும் வெலிசறையில் அமைந்துள்ள தொழிற்சாலைகளையும் மூடியுள்ளார்.

இதற்கிடையில், ஆடைத் தொழில் அடிக்கடி வீழ்ச்சியடைந்து வருவதாகவும், குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் பெரும் வேலை இழப்பு ஏற்படும் என்றும் Brandix குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஷ்ரப் உமர் சமீபத்தில் ஊடகங்களுக்கு அறிவித்ததாக தொழில்துறை வட்டாரங்களில் இருந்து தககவல் வெளியாகியுள்ளது.

வழமை போன்று ஆடை உற்பத்தி கோரிக்கை இல்லாமை, அமெரிக்க பொருளாதார நெருக்கடி, இலங்கையின் நிதி நெருக்கடியினால் டொலரின் நிலையற்ற தன்மை போன்ற காரணங்களால் இலங்கை ஆடைத்தொழிற்சாலை முகாமையாளர்கள் மூடப்படுவது வழமையான விடயமாகியுள்ளது.

ஆசியாவில், Brandix நிறுவனத்திற்கு சொந்தமான பல தொழிற்சாலைகள் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் அமைந்துள்ளன, அவை மிகவும் வெற்றிகரமாக இயங்குவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here