இளநரை பிரச்சனையை தற்போதைய காலக்கட்டத்தில் டீன் ஏஜ் பருவத்தினர் பலரும் எதிர்கொள்கின்றனர். உடம்பில் வாதம், பித்தம், கபம் மூன்றும் சரியான அளவில் இருக்கும் பட்சத்தில் உடலில் எவ்விதமான நோய்களும் அண்டாது என்பது சித்தர்களின் வாக்கு.
இம்மூன்றில் ஒன்றான பித்தம் அதிகரிக்கும் போது தலைமுடி நரைக்க தோன்றும்.இதனோடு, மரபு வழியிலும், உணவு பழக்கம் காரணமாகவும் தலைமுடி நரைக்கும்.இதற்கான தீர்வை செயற்கை முறையில் அணுகாமல் இயற்கை முறையைக் கொண்டு சரி செய்ய முடியும்.
எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். இப்படி செய்தால் உஷ்ணம் குறைந்து கூந்தலுக்கான ஊட்டம் கிடைக்கப்பெறுவதால் இளநரையின் தாக்கத்தில் இருந்து தப்பலாம்.
பீட்ரூட்டை தோல் சீவி மிக்ஸியில் நீர் விடாமல் அரைத்து அதன் சாறை எண்ணெய் படியாத கூந்தலில் அடிப்பகுதியிலிருந்து வேர்ப்பகுதி நுனிப்பகுதிவரை சாறை நன்றாக தடவி அரைமணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
வாரம் மூன்று முறை இவ்வாறு செய்தால் நாளடைவில் தலைமுடி கருமையாக மாறும்.
நரைமுடிக்கு தீர்வு காண்பதில் எலுமிச்சை உதவுகிறது.
5 மில்லி எலுமிச்சை சாறு மற்றும் 20 கிராம் நெல்லிக்காய் பொடியை கலந்து பேஸ்ட்டை உருவாக்கி, பின் இந்த பேஸ்ட்டை தலையில் தடவ வேண்டும். ஒரு மணி நேரம் தலைமுடியில் அப்படியே இருக்க விட்டு, பின்னர் முடியைக் கழுவி வர வேண்டும்.
ஒரு வாரத்தில் நல்ல மாற்றம் தெரியும்.