இளையவர்களின் தலையில் பரவிவரும் பூஞ்சை நோய் – சுகாதார சங்கம் அவசரவேண்டுகோள்

0
161

திதாக சந்தைக்கு வந்திருக்கும் சிகையலங்கார நிபுணர்களின் வருகையால் இந்த நிலை அதிகரித்துள்ளதாகவும் குறித்த சங்கம் தெரவித்துள்ளது. சுவிஸ்சர்லாந்து லீஸ்டல் பகுதியில் சிகையலங்கார நிலையங்களிலிருந்து புதிய வகையிலான பூஞ்சை நோய் பரவி வருவதாக suisse de la coiffure என்ற சுகாதார சங்கம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், புதிதாக சந்தைக்கு வந்திருக்கும் சிகையலங்கார நிபுணர்களின் வருகையால் இந்த நிலை அதிகரித்துள்ளதாகவும் குறித்த சங்கம் தெரவித்துள்ளது.

தற்போது சிகையரங்கார துறையில் பல வகையான இரசாயனங்கள் இதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது. மேலும், இதன்காரணமாக இளையவர்களின் தலைகளில் பூஞ்சை தொற்று அதிகளவில் பரவிவருகின்றது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“சிகையலங்கார நிபுணர், வாடிக்கையாளர்களையும், தங்களையும் நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாக்க, செயல்பாட்டு சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்று ஒருஅறிக்கை தயாரித்து வெளியிட்டுள்ளனர்.

மேலும், சிகையலங்காரக் கடையில் நோய்க்கிருமிகள் பரவுவதைத் தடுக்க, பட்டியை தொடர்ந்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மற்றவற்றுடன், ஹேர் கிளிப்பர்கள் மற்றும் ஷேவிங் பிரஷ் ஆகியவற்றை சுத்தம் செய்தல் மற்றும் கிருமி நீக்கம் செய்தல் மற்றும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்குப் பிறகு குறைந்தது 60 டிகிரி செல்சியஸ் உஸ்ணம் கொணட் சுடு நீரில் டவல்களைக் கழுவுதல் ஆகியவை இதில் அடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரச ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

குறித்த பூஞ்சை தாக்கதல் சிகையலங்கார நிபுணர் வருகை இதற்குக் காரணம் என்று நிரூபிக்கப்படவில்லை. தடுப்பு நடவடிக்கையாகவே இந்த முறையீடு செய்கிறோம். ஒரு சங்கமாக, பயிற்சியின் போது கூட, சுகாதார விதிமுறைகளுக்கு இணங்குவது ஒரு முக்கியமான பிரச்சினை என்பதை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here