இஷாரா செவ்வந்தி தலைமறைவாக உதவியவர்கள் : 10 பேர் கைது – மேலும் பலருக்கு வலைவீச்சு!

0
56

கனேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதன் பின்னர், இஷாரா செவ்வந்தி நாட்டில் தலைமறைவாகியிருக்க உதவிபுரிந்தமை தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இஷாராவுடன் தொலைபேசி கலந்துரையாடல்களில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கைது செய்யப்படவுள்ளனர்.

அதன்படி, அவரின் தொலைபேசி அழைப்புகள் ஆராயப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை வெளிநாடுகளுக்கு கடல் மார்க்கமாக அனுப்பும் பிரதான ஆட்கடத்தல்காரர் உள்ளிட்ட வடக்கில் கைது செய்யப்பட்டுள்ள 04 சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்களே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

இவர்களை தடுப்புக் காவலில் விசாரணை செய்வதா? அல்லது விளக்கமறியல் உத்தரவு கோருவதா என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இஷாரா செவ்வந்தி தலைமறைவாகியிருந்த பகுதிகளில் உதவி புரிந்தவர்கள் தொடர்பான விரிவான விசாரணைகளை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இஷாராவிற்கு உதவிபுரிந்தமை தொடர்பில் இதுவரையில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களில் சிலர் தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Image Modified – Gemini AI

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here