காஸாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உயிரிழந்தமைக்கு காரணம் தொழில்நுட்பகோளாறு தான் என இஸ்ரேல் பாதுகாப்பு படை விளக்கம் அளித்துள்ளது.
இங்கு நாளொன்றுக்கு ஐந்து லொறிகளில் நிவாரண பொருட்கள் வருகின்றன. அவற்றை பெறுவதற்கு தினமும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. காஸாவில் உதவி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
நுசைரத் அகதிகள் முகாமில் தண்ணீர் விநியோக இடத்தில் இஸ்ரேல் படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட 34 பேர் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களில் சந்தை மற்றும் தண்ணீர் விநியோக இடத்தில் இருந்தவர்களும் அடங்குவர். இந்த சம்பவம் தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்டதாகக் கூறிய இஸ்ரேல் இராணுவம், தற்போது இது குறித்து விசாரித்து வருகிறோம் என விளக்கம் அளித்துள்ளது.