இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் புதிய இராணுவ கூட்டணியை உருவாக்க முயற்சி!

0
3

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஆதிகக்த்தை கட்டுப்படுத்தும் நோக்கில், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து நேட்டோ போன்ற ஒரு இராணுவ கட்டமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளன.

இது பற்றிய ஆலோசனைக் கூட்டம் ஒன்று இரண்டு நாட்களாக கட்டாரில் நடைபெற்றுள்ளது. தொடர்ச்சியக மேலும் அலோசனைக் கூட்டங்கள் இடம்பெறும் எனவும் புதிய இராணுவ கூட்டு அணி அமைக்கப்படும் எனவும் சவுதி அரேபியாவின் என்பிசி செய்திச் சேவை (nbcnews) தெரிவித்துள்ளது. இக் கலந்துரையாடலில் சவுதி அரேபியா முக்கிய பாங்கு வகிப்பதாகவும் அந்த செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

கலந்துரையாடலில், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், பஹ்ரைன், பாகிஸ்தான், துருக்கி, எகிப்து உள்ளிட்ட 40 இஸ்லாமிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தனர்.

மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஒன்றினைந்து நேட்டோ என்ற இராணுவ கூட்டு அணியை அமெரிக்காவை மையப்படுத்தி உருவாக்கியிருப்பது போன்று, இஸ்லாமிய நாடுகளை பாதுகாக்கும் நோக்கில் அரபு நாடுகளும் வேறு இஸ்லாமிய நாடுகளும் கூட்டாக இணைந்து புதிய இராணுவ அணியை உருவாக்குவது பற்றி விரிவாக ஆராய்கின்றன.

கட்டார் நாட்டில் இது பற்றிய ஏற்பாட்டுக் கூட்டங்கள் இடம்பெற்ற நிலையில் நேற்றும் நேற்று முன்தினமும் தொடர் சந்திப்புகள் இடம்பெற்றதாக கட்டார் அரசு கூறியுள்ளது.

இஸ்ரேலுக்கும் அதனை சுற்றியுள்ள இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையே இராணுவ மேதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பின்னணியில் இவ்வாறான புதிய யோசனை ஒன்றை கட்டார் அரசு முன்வைத்திருக்கிறது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மொத்தம் 16 நாடுகள் உள்ளன. 15 நாடுகள் இஸ்லாமிய அரபு நாடுகள். சவுதி அரேபியா, ஈராக், ஈரான், துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, ஜோர்டான், சிரியா, ஏமன், லெபனான், இஸ்ரேல், பாலஸ்தீனம், ஓமன், கத்தார், குவைத், பக்ரைன் உள்ளிட்ட நாடுகள் மத்திய கிழக்கு நாடுகளாக உள்ளன.

இவற்றில் இஸ்ரேல் அரசு மாத்திரம் யூத கிறிஸ்தவ நாடாக உள்ள நிலையில், பாலஸ்தீனத்தில் இன அழிப்பு போரை நடத்திக் கொண்டு, லெபனான், ஈரான் போன்ற இஸ்லாமிய நாடுகளையும் இஸ்ரேல் தாக்கி வருகின்றது.

இந்த நிலையில் புதிய இராணுவ கூட்டு ஒன்றை இஸ்லாமிய நாடுகள் ஒன்னைந்து உருவாக்கினால், புவிசார் அரசியல் ரீதியில் மத்திய கிழக்கில் மேலும் மாற்றங்கள் வரக் கூடுமென சர்வதே ஊடகங்கள் கூறுகின்றன.

ஆனாலும் இஸ்லாமிய நாடுகள் மத்தியில் பாரிய அளவில் ஒற்றுமை இல்லை என்பதால் இந்த இராணு கூட்டு எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என கூற முடியது என ஐரோப்பிய ஊடகங்கள் விமர்சித்துள்ளன.

அதேவேளை இக் கலந்துரையாடலில் . பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேரடியாக பங்கொண்டதாகவும், இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு புதிய இராணுவ கூட்டு வாய்ப்பாக அமையும் எனவும் பாகிஸ்தான் ஊடகங்கள் விமர்சிக்கின்றன.

அதேநேரம் இப் புதிய இராணுவ கூட்டணி உருவாகினால், அந்தக் கூட்டணியில் பாகிஸ்தான் முக்கிய பங்கு வகித்தால் இந்தோ – பசுபிக் பிரந்தியத்தில் இந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என புதுடில்லி ஊடகங்கள் விமர்சிக்கின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here