இஸ்ரேல் தாக்குதலில் 25 பாலஸ்தீனர்கள் பலி!

0
6

காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் எல்லையை கடந்து செல்ல ஏதுவாக, காசா-எகிப்து இடையேயான ராபா எல்லையை இஸ்ரேல் விரைவில் திறப்பதாக அறிவித்தது. அதன்படி சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்படுவதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று அதிகாலை காசாவில் உள்ள ராபா பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவத்தினர் குண்டுகளை வீசியெறிந்தும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 30 பேர் உயிரிழந்தனர்.

காசா-இஸ்ரேல் இடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தி போரை நிறுத்தினார். அமைதி ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளநிலையில் பாலஸ்தீனம் மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here