இஸ்ரேலிய அரசாங்கத்தின் உதவியுடன் விருத்தி செய்யப்படும் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், வீட்டு பராமரிப்புத் துறையில் பணிபுரியும் 29 இலங்கைப் பெண் தொழிலாளர்கள் கொண்ட புதிய குழு ஜூலை 7 மற்றும் 9 ஆகிய திகதிகளில் இஸ்ரேலுக்குப் பயணப்பட உள்ளனர்.
தெரிவு செய்யப்பட்ட குறித்த பணியாளர்களுக்க்கான விமான டிக்கெட்டுகளை அதிகாரப்பூர்வமாக வழங்கும் நிகழ்வு நேற்று (ஜூலை 4) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் (SLBFE) நடைபெற்றது.
2025 ஆம் ஆண்டில் இதுவரை, மொத்தம் 379 இலங்கை பராமரிப்பாளர்கள் இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இந்த வேலைவாய்ப்புகள் இலங்கை மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்களுக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகின்றன, இது இஸ்ரேலின் வீட்டு பராமரிப்புத் துறையில் பயிற்சி பெற்ற இலங்கை பராமரிப்பாளர்களுக்கு வேலைவாய்ப்பை பெறுவதை எளிதாக்குகிறது.
இன்றுவரை இந்த ஒப்பந்தத்தின் கீழ் 2,269 இலங்கையர்கள் இஸ்ரேலின் பராமரிப்புத் துறையில் சேர்க்கப்பட்டுள்ளனர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்து