ஈரானுக்கு பதிலடி கொடுக்க வளைகுடா நாடுகள் பரிசீலனை!

0
8

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஈரான் நாட்டின் உச்ச தலைவர் காமேனியை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்கள் வான்வெளி தாக்குதல் மூலம் வீழ்த்தியுள்ளனர். இவரது மரணத்தால் ஈரான் மக்கள் பெரும் சோகத்தில் இருக்கும் நிலையில், இதற்கு கடும் பதிலடி கொடுக்கப்படும் என்று அந்நாட்டு அமைச்சரவை அறிவித்திருக்கிறது.

ஏற்கனவே வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்காவின் நிலைகள் மீது ஈரான் தாக்குதலை நடத்தி வருவதால் பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், இஸ்ரேல், ஜோர்டான் ஆகிய நாடுகளில் சேதங்களும், உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.

இந்தநிலையில், எங்கள் மீது தாக்குதல் ஏன்? என்ற கேள்வியுடன் ஈரானின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் திட்டங்களை பரிசீலித்து வருவதாக வளைகுடா நாடுகள் அறிவித்துள்ளன.

பதற்றத்தைத் தணிக்க மேற்கொண்ட பலகட்ட தூதரக முயற்சிகளையும் மீறி, ஈரான் தாக்கி வருகிறது. எங்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம் என (GCC) ஜிசிசி நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.

ஈரானுக்கு எதிரான போர் சூழல் வளைகுடா நாடுகளை மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here