ஈரானை வாட்டும் வெப்பம் – அரசு அறிவித்துள்ள பொதுவிடுமுறை

0
161

ஈரானை வாட்டி வதைக்கும் வெப்பம் காரணமாக இன்றும் நாளையும் விடுமுறையை அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு. அத்துடன் வயதானவர்கள் மற்றும் உடல்நலம் பாதிப்புக்கு உள்ளானவர்கள் வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

தெற்கு ஈரானில் உள்ள பல நகரங்கள் ஏற்கனவே பல நாட்கள் அதிகளவிலான வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தெற்கு நகரமான அஹ்வாஸில் இந்த வாரம் வெப்பநிலை 51 பாகை செல்சியஸை தாண்டியதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக அரசு செய்தித் தொடர்பாளர் அலி பஹடோரி- ஜஹ்ரோமி கூறுகையில், “புதன் மற்றும் வியாழன் (இன்று மற்றும் நாளை ) விடுமுறை தினங்களாக இருக்கும். அதே நேரத்தில் மருத்துவமனைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் என்று சுகாதார அமைச்சகம் கூறியது” என்றார்.

அதன்படி, இன்று தெஹ்ரானில் வெப்பநிலை 39 பாகை செல்சியசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here