ஈரான் கப்பல்களில் இருந்து எண்ணெய் விநியோகத்திற்கு அமெரிக்கா அனுமதி!

0
2
thamilan

கடலில் உள்ள ஈரானின் கப்பல்களிலிருந்து மசகு எண்ணெய்யை விநியோகம் செய்ய அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.

ஈரான் நாட்டின் மசகு எண்ணெய் மீதான தடைகள் ஏப்ரல் 19ஆம் திகதி வரை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

நடுக்கடலில், ஈரானின் கப்பல்களில் ஏற்கனவே உள்ள மசகு எண்ணெய், பிற பெட்ரோலிய பொருள்களை விநியோகிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஈரான் மீதான போர் தொடங்கி கடந்த இரண்டு வாரங்களில், ஈரானின் மசகு எண்ணெய் விநியோகத்துக்கு அமெரிக்கா அனுமதி வழங்குவது இது மூன்றாவது முறையாகும்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு, மார்ச் 20ஆம் திகதி வெளியிட்ட உத்தரவில், ஈரான் மீது அமெரிக்கா – ஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக, உலகளவில் எழுந்துள்ள எரிபொருள் தட்டுப்பாடு அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், நடுக்கடலில் நிற்கும் ஈரான் நாட்டிற்குச் சொந்தமான கப்பல்களில் இருக்கும் மசகு எண்ணெய் மற்றும் பிற எரிபொருள்களை உலக நாடுகளுக்கு விநியோகிக்க அனுமதி வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ரஷ்ய நாட்டிடமிருந்து, மசகு எண்ணெய் வாங்கவும் அமெரிக்கா வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்த நிலையில், ஈரானிடமிருந்தும் ஏப்ரல் 19ஆம் திகதி வரை மசகு எண்ணெய் வாங்க அனுமதி வழங்கியிருக்கின்றது. இது அனுமதி தற்காலிகமானதுதான் என்பதையும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here