உக்ரைனுக்கு 1,550 கவச வாகனங்கள் மற்றும் 230 இராணுவ டாங்கிகளை நேட்டோ நட்பு நாடுகள் கொடுத்துள்ளதாக நேட்டோ தலைவர் ஸ்டோல்டன்பெர்க் வியாழக்கிழமை தெரிவித்தார்.
கடந்த ஆண்டுபெப்ரவரியில் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய படைகளை எதிர்த்து சண்டையிட நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன.
அந்த வகையில் தற்போது உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் மற்றும் அதன் கூட்டணி நாடுகள் இணைந்து 1550 கவச வாகனங்கள் மற்றும் 230 டாங்கிகளை வழங்கியுள்ளன.
இந்த உதவி ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து நிலப்பகுதியை மீட்டெடுக்க உக்ரைனுக்கு உதவிகரமாக இருக்கும் என்று நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
அத்துடன் 9க்கும் மேற்பட்ட உக்ரைனிய கவசப் படைகளுக்கு நேட்டோ பயிற்சி வழங்கி இருப்பதாகவும், அவர்கள் விரைவில் ரஷ்ய படைகள் ஆக்கிரமித்த இடங்களை மீட்டெடுக்க வலுவான நிலையில் போரின் முன்வரிசையில் களமிறங்குவார்கள் என்றும் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் ரஷ்யாவையும் குறைத்து மதிப்பிட கூடாது, ரஷ்யா தரைப்படை வீரர்களை ஒன்றிணைத்து வரும் நிலையில் ஆயிரக்கணக்கான துருப்புகளை முன்வரிசைக்கு அனுப்ப தயாராகி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனுக்கான நேட்டோ படைகளின் இந்த உதவிக்கு மத்தியில் போலந்து மற்றும் செக் குடியரசு சோவியத் MiG-29 விமானங்களை உக்ரைனுக்கு வழங்கியுள்ளன.
#NATO Secretary General #Stoltenberg said that #Ukraine has already received 98 percent of the military aid promised by the West.
It includes 1550 armored vehicles, 230 tanks and a lot of ammunition.
Jens Stoltenberg also added that NATO countries have prepared and armed 9… pic.twitter.com/X164PZ4zN6
— NEXTA (@nexta_tv) April 27, 2023