உச்சத்தை தொட்ட தேங்காய் விலை : வெளியானது காரணம்

0
8

தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் சில ஊழல் அதிகாரிகளின் செயற்பாடுகளினால் தேங்காய் விலை அபரிமிதமாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின் பிரதம அழைப்பாளர் புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென்னை அபிவிருத்தி அதிகார சபை சட்டத்தின் பிரகாரம், தேங்காய் ஏற்றுமதி கட்டுப்பாடு, தேங்காய் ஏலம், ஏற்றுமதிக்கான தேங்காய் உற்பத்தி ஆகிய பொறுப்புகள் தென்னை அபிவிருத்தி அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று முன்தினம்(19ஆம் திகதி) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த புத்திக, சில அதிகாரிகள் சட்டத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றாததன் காரணமாகவே தேங்காய் விலை அதிகரித்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேங்காய் உற்பத்தி குறைவாக இருக்கும். அந்த நேரத்தில் உள்ளூர் தேங்காய் நுகர்வுக்கு முக்கிய வாய்ப்பு அளிக்கப்பட்டு ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

ஆனால் அதிகாரத்தின் சில ஊழல் அதிகாரிகள் கடத்தல்காரர்களுடன் இணைந்து தேங்காய் ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.தேங்காய் ஏலத்தில், தற்போது இந்த நாட்டில் தேங்காய் ஒன்றின் விலை 160 ரூபாவாக உள்ளது.ஆனால், இதன் விலை 170, 180 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

1971 ஆம் ஆண்டு 46 ஆம் இலக்க தென்னை அபிவிருத்தி அதிகார சபை சட்டம் இயற்றப்பட்டு 53 வருடங்கள் கடந்துள்ள போதிலும், சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டங்கள் தயாராகவில்லை எனவும், அதனால் ஊழல் அதிகாரிகள் தொடர்ந்தும் சட்டத்தை மீறுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here