உடப்புஸ்ஸல்லாவ மக்கள் வங்கி கிளை சமீபகாலமாக கொரோனா அச்சுறுத்தலால் மூடி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இதனால் பணம் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொண்ட உடபுஸ்ஸல்லாவ மக்கள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ம.ம.மு தலைவருமான வே.ராதாகிருஸ்ணனிடம் தெரிவித்ததையடுத்து உடனடியாக உடப்புஸ்ஸல்லாவ மக்கள் வங்கி கிளை முகாமையாளரிடம் பேசியதமைக்கு இணங்க வங்கியை திறப்பதாக கூறியுள்ளார்.
மேலும் முறையான பாதுகாப்பு வழங்குமாறு கிளை முகாமையாளர் கேட்டுக்கொண்டதற்கமைய நுவரெலியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருடன் கலந்துரையாடி பாதுகாப்பு வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.
இன்று முதல் காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 1மணிவரை உடப்புஸ்ஸல்லாவ மக்கள் வங்கி கிளை திறக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்