உடப்புஸ்ஸலாவயில் நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி. – குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தபட்டனர்….!

0
187

உடப்புஸ்ஸலாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோடன் தோட்டப் பிரிவான கிறேசிலின் தோட்டத்தில், 45 வயதுடைய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதென, வலப்பனை பிரதேசத்துக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்தார்.

குறித்த நபர், கொழும்பில் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றுபவர் எனவும் புதுவருடத்துக்காக கொழும்பிலிருந்து கடந்த வாரம் அவர் வீட்டுக்கு வருகை தந்த நிலையில், அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் அறிக்கை இன்றைய தினம் கிடைக்கப்பெற்ற நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, அவரது குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவருடன் தொடர்பைப் பேணிய நபர்கள் தொடர்பான விசாரணைகளை, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன், தொற்று உறுதி செய்யப்பட்ட நபரைத் தனிமைப்படுத்தல் சிகிச்சை முகாமுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

டி சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here