உணவகம் ஒன்றில் எரிவாயு கசிவு காரணமாக ஹட்டனில் வெடிப்பு சம்பவமொன்று பதிவு

0
221

ஹட்டன் மல்லியப்பூ சந்தி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு கசிவு காரணமாக இன்று (29) காலை வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

காலை உணவைச் சமைத்துக் கொண்டிருந்த போது இந்த வெடிப்பு ஏற்பட்டதாக குறித்த உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு கொள்கலன் மற்றும் எரிவாயு அடுப்புக்கான குழாயில் வெடிப்பு ஏற்பட்டதால் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தினால் உணவகம் சேதமடைந்துள்ளதுடன், அங்கிருந்த உணவுகளும் பாழடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here