பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் உதைபந்தாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவன் ஒருவர் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளதாக பின்வத்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை வடக்கை வசிப்பிடமாகக் கொண்ட 16 வயதுடைய கே ஜயன டியோன் என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவன் மேலும் சில மாணவர்களுடன் உதைபந்தாட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை கல்லூரி மைதானத்தில் திடீரென விழுந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் மாணவன் விழுவதற்கு சற்று முன்னர் பாடசாலையில் உள்ள குழாயில் இருந்து தண்ணீர் குடித்துள்ளமை காவல்துறை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாணந்துறை குற்றத்தடுப்பு ஆய்வுகூட அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர். உயிரிழந்த மாணவனின் பிரேத பரிசோதனை பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் நடைபெற உள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
பின்வட்டா காவல் நிலைய முதன்மை ஆய்வாளர் பத்மா நந்தனா தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.