உத்தேச கல்வி சீர்திருத்தங்கள் குறித்த ஒத்திவைப்பு விவாதம் இன்று (24) நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளது.
பாராளுமன்றம் காலை 9:30 மணிக்கு கூடும் என்றும், விவாதம் மாலை 5:30 மணி வரை நடைபெறும் என்றும் நாடாளுமன்ற தொடர்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இன்று விவாதிக்கப்படவிருந்த இலங்கை மின்சார (திருத்த) சட்டமூலம் மற்றுமொரு நாளில் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது.
சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று (22) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.




