கம்பளை நகரில் இருந்து உனம்புவ பிரதேசத்திற்கு செல்லும் பிரதான பாதையில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையால் அப்பகுதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.
ரந்தேட்டிய விகாரைக்கு அருகில் மிகப்பெரிய பலா மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் மின் கம்பிகளும் அறுந்த நிலையில் உனம்புவ பகுதிக்கு மின்சார தடை ஏற்பட்டுள்ளது.




