உருமாறியுள்ள “லாம்ப்டா வைரஸ்” மிகமோசமான பாதிப்புக்களை ஆகஸ்ட் மாதத்திற்குள் ஏற்படுத்தும்?

0
172

டெல்டா வைரஸ் வகையை விட புதிதாகக் கண்டறியப்பட்ட “லாம்ப்டா வைரஸ்” மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் இதன்தாக்கம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வைரஸ் பாதிப்பு முடிந்துவிட்டதாகக் கருதும்போது மீண்டும் அடுத்த அலை தாக்குகிறது. இப்படி அலை அலையாக வைரஸ் பாதிப்பு ஏற்பட கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதே முக்கிய காரணமாக அமைவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்டா வைரஸ்தான் உலகின் பல நாடுகளில் அடுத்த அலையை ஏற்படுத்தி வருகிறது. மேலும் தொடராக கொரோனா வைரஸ் உருமாறுவது உலக நாடுகளில் பல்வேறு சிக்கலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான பெரு நாட்டில் தற்போது புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. லாம்ப்டா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உருமாறிய கொரோனா லத்தீன் அமெரிக்க நாடுகள் உட்பட 30ற்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இது கவனிக்கப்பட வேண்டியது என்றும் ஐரோப்பிய நாடுகள் டெல்டாவை எதிர்த்துப் போராடுகின்ற நிலையில் இந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா மாறுபாட்டிற்கு எதிரான ஐரோப்பாவில் நடந்த இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு மத்தியில் இந்த மாறுபாட்டின் தோற்றம் வந்துள்ளது. இது ஆகஸ்ட் மாதத்திற்குள் ஆதிக்கம் செலுத்தும் என்றும் உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டுள்ளது.

இந்தச் சூழலில் இந்தியா உட்பட பலநாடுகளில் மிகமோசமான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா கொரோனா வகையைவிட லாம்ப்டா கொரோனா மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதாக மலேசியா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

லாம்ப்டா கொரோனாவால் உயிரிழப்புகள் பல மடங்கு அதிகரிப்பதாகவும் மலேசியா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது கொரோனா அடுத்த அலையை ஏற்படுத்தக் கூடும் என மருத்துவ துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பெரு நாட்டில் கடந்த இரண்டு மாதங்களில் உறுதி செய்யப்பட்ட வைரஸ் பாதிப்புகளில் 82சதவீதம் லாம்ப்டா கொரோனா வைரஸ் வகையால் ஏற்பட்டவை. மற்றொரு தென் அமெரிக்க நாடான சிலியில் 31சதவீதமானவர்களுக்கு லாம்ப்டா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிரிட்டன் நாட்டில் இப்போது ஆறு பேருக்கு மட்டுமே லாம்ப்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது எந்தளவு தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும்இ தடுப்பூசிகளின் செயல்பாடு உள்ளிட்டவற்றை மருத்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here