உலக சாதனை படைத்த லோன் மாசண்ட்!

0
4

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக நீச்சல் சம்பியன்ஷிப்பில், 200 மீற்றர் தனிநபர் மெட்லி நீச்சலில் பிரான்ஸ் வீரர் லோன் மாசண்ட் உலக சாதனை படைத்தார்.

அரையிறுதி சுற்றில் பந்தய இலக்கை 1 நிமிடம், 52.61 விநாடிகளில் கடந்த அவர், 14 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன் 2011 இல் அமெரிக்காவின் ரயான் லாக்டே 1 நிமிடம், 54 விநாடிகளில் இலக்கை அடைந்ததே சாதனையாக இருந்தது.

பிரான்ஸ் வீரர் லோன் மாசண்ட் பாரீஸ் ஒலிம்பிக்கில் 4 தங்கப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here