உலகக் கோப்​பை​யில் குகேஷ் வெளி​யேற்​றம்!

0
47

ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவா​வில் நடை​பெற்று வரு​கிறது. இதில் 82 நாடு​களை சேர்ந்த 206 வீரர், வீராங்​க​னை​கள் கலந்​து​கொண்​டுள்​ளனர். இந்​தத் தொடரில் நேற்று 3-வது சுற்​றின் 2-வது ஆட்​டங்​கள் நடை​பெற்​றன.

இதில் உலக சாம்​பிய​னான இந்​தி​யா​வின் டி.கு​கேஷ், ஜெர்​மனி கிராண்ட் மாஸ்​ட​ரான ஃபிரடெரிக் ஸ்வேனுடன் மோதி​னார். இதில் 55-வது நகர்த்​தலின் போது குகேஷ் தோல்வி அடைந்​தார்.

இவர்​கள் இரு​வரும் மோதிய முதல் ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​திருந்​தது. இரு ஆட்​டங்​களின் சராசரி​யாக ஃபிரடெரிக் ஸ்வேன் 1.5-0.5 என்ற புள்​ளி​கள் கணக்​கில் வெற்றி பெற்று 4-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார். நாக் அவுட் போட்டி என்​ப​தால் தோல்வி அடைந்த குகேஷ் தொடரில் இருந்து வெளி​யேறி​னார்.

இந்​திய கிராண்ட் மாஸ்​டர்​களான பிரக்​ஞானந்​தா, அர்​ஜூன் எரி​கைசி, ஹரி கிருஷ்ணா, பிரணவ் ஆகியோர் 4-வது சுற்​றுக்கு முன்​னேறினர். பிரக்​ஞானந்​தா, அர்​மேனி​யா​வின் ராபர்ட் ஹோவன்​னிஸ்​யனுடன் மோதி​னார். இதில் பிரக்​ஞானந்தா 42-வது நகர்த்​தலின் போது வெற்றி பெற்​றார். அர்​ஜூன் எரி​கைசி, ஹரி கிருஷ்ணா, பிரணவ் முதல் ஆட்​டத்​தில் வெற்றி பெற்​றிருந்த நிலை​யில் 2-வது ஆட்​டங்​களை டி​ரா​வில்​ முடித்​து 4-வது சுற்​றில்​ ​கால்​ப​தித்​தனர்​.

HinduTamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here