உலகில் நிகழவுள்ள சந்திர கிரகணம் : இலங்கையருக்கு அடித்த அதிஷ்டம்

0
161

உலகில் நாளையதினம்(28) இடம்பெறவுள்ள நான்குமணிநேர பகுதிநேர சந்திரகிரகணத்தை காணும் வாய்ப்பு இலங்கையருக்கு கிடைத்துள்ளதாக மொரட்டுவை ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி மேற்கு பசுபிக் பெருங்கடல், அவுஸ்திரேலியா, ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா, கிழக்கு தென் அமெரிக்கா, வடகிழக்கு வட அமெரிக்கா, அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், தென் பசுபிக் பெருங்கடல் பகுதிகளில் சந்திர கிரகணம் தெரியும்.இந்தசந்திர கிரகணம் நாளை ஒக்டோபர் 28 இரவு தொடக்கம் 29 ஆம் திகதி காலை வரை சுமார் 4 மணித்தியாலங்கள் 25 நிமிடங்கள் தென்படவுள்ளது.

முழு நிலாவும் பூமியின் நிழலின் கீழ் வரும்போது முழு சந்திர கிரகணமும், நிலவின் ஒரு பகுதி பூமியின் நிழலில் வரும்போது மட்டுமே பகுதி சந்திர கிரகணமும் நிகழும் என்று ஆர்தர் சி. கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.

பகுதி சந்திரகிரகணம் இலங்கை நேரப்படி ஒக்டோபர் 28 ஆம் திகதி 23.31 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. பகுதி சந்திர கிரகணம் ஒக்டோபர் 29 அதிகாலை 01.05 மணிக்கும், அதிகபட்ச சந்திர கிரகணம் 29 அதிகாலை 01.44 மணிக்கு 05 வினாடிகளிலும் தெரியும்.

பகுதி சந்திர கிரகணத்தின் முடிவு 29 அதிகாலை 2.22 மணிக்கு நிகழும் என்றும், பெனும்பிரல் சந்திர கிரகணம் அதிகாலை 03.56 25 வினாடிகளுக்கு நிகழும் என்றும் ஆர்தர் சி கிளார்க் மையம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here