ஊடக துறையில் ஆர்வத்தினை ஏற்படுத்த இளைஞர் யுவதிகளுக்கு நுவரெலியாவில் பயிற்சி

0
207

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு ஊடக துறையில் ஆர்வத்தினை ஏற்படுத்துவதற்காக பிரயோக பயிற்சி நெறி ஒன்று நுவரெலியா புனித சவேரியார் ஆலய பங்கு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த பயிற்சி நெறி அருடட்தந்தையர்களான லெஸ்லி பெரேரா,ஜெயநாத் பெரேரா ஆகியவர்களின் தலைமையில் இன்று (18) ம் திகதி காலை 10.மணி தொடக்கம்,மாலை 3.00 மணி வரை நடைபெற்றது.

இந்த பயிற்சி நெருக்கு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள மட்டுக்கலை, கவுலினா, டயகம, ராகலை, நுவரெலியா உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.

மேற்படி பயிற்சி நெறியில் செய்தி திரட்டல்,செய்தி எழுதல் படப்பிடிப்பு,ஒளி பதிவு,ஊடாக பாதுகாப்பு.உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் செய்தி எழுவது தொடர்பாக பயிற்சியும் பெற்றுக்கொடுக்கப்பட்டன.சமூக ஊடகங்களின் பங்களிப்பு சம்பந்தமாகவும் இதன் போது பேசப்பட்டன

இந்நிகழ்வுக்கான அனுசரனையினை கண்டி  மறைமாவட்ட கலைத்தொடர்பு நிலையம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்செயலமர்வின் வளவாளர்களாக ஊடகவியலாளர் க.சுந்தலிங்கம்,ஏற்பாட்டாளரும் வளவாயருமான ,ச.நிக்கலஸ் ஆகியோர் செயப்பட்டனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here