ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – காசாவில் அவலம்!

0
7

காசாவில் முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தில் உண்மையான பட்டினியின் அறிகுறிகள் காணப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

காசா பகுதியில் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் இரு குழந்தைகள் உட்பட 14 பலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2023 ஆண்டு ஒக்டோபரில் இஸ்ரேல், காசா மீது போரைத் தொடங்கியதிலிருந்து, ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 147 ஆக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இவற்றில் 88 குழந்தைகளும் உள்ளனர் என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, அண்மைய வாரங்களில் பசியால் பெரும்பாலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக  கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here