ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் உள்ள திஸ்மல்பொல ரயில் நிலையத்தில், 14 வயது சிறுவன் ஒருவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளான்.
உயிரிழந்தவர் மெதகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரம்புக்கனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் ரயிலில், சிறுவன் தனது நண்பர்களுடன் திஸ்மல்பொல நிலையத்திற்குச் சென்றுள்ளான் எனவும் அவன் நடைபாதையில் செல்லாமல் தண்டவாளத்தில் சென்றுள்ள நிலையில் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பாக ரம்புக்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




