எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு

0
96

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தற்போது எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின்படி, 2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையான காலப்பகுதியில் மொத்தம் 230 தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2025 ஆம் ஆண்டின் முதற்பகுதியில் பதிவான தொற்றாளர்களில் , 30 ஆண்களும் இரண்டு பெண்களும் 15–24 வயதுக்குட்பட்டவர்கள் என்பதோடு மீதமுள்ள தொற்றாளர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை எச்.ஐ.வி எய்ட்ஸ் தொடர்பாக 10 இறப்புகள் பதிவாகியுள்ள அதேவேளை  2024 ஆம் ஆண்டில், மொத்தம் 47 பேர் எச்.ஐ.வி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் இலங்கை கடந்த ஆண்டில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான எச்.ஐ.வி பரிசோதனைகளை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here