இந்திய இலங்கை பொருளாதார உடன்டிக்கை தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கையை மஹிந்த ஆதரவு அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்த்தன விடுத்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் அரசாங்கம் எட்கா உடன்படிக்கையை செய்து கொள்ளவுள்ளது.
இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் பட்சத்தில், இலங்கையின் அனைத்து துறைகளிலும் இந்தியர்களே ஆதிக்கம் செலுத்துவர்.
இலங்கையின் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைக்காது போகும்.
இது வற் வரி அதிகரிப்பை விட மோசமானது என்றும் மகிந்த யாப்பா அபேவர்த்தன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.