எட்டியாந்தோட்டை புனித மரியாள் கல்லூரியில் இடம்பெற்ற பெண்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வுகேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை புனித மரியாள் கல்லூரியில் பெண்களுக்கான விழிப்ப10ட்டும் செயலமர்வு
“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்” எனும் தொனிப்பொருளில் 2018.05.29ஆம் திகதி
காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.
இந்நிகழ்வு கல்வி அமைச்சின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் பிரதம அதிதியாகவும்
வளவாளராகவும் இந்தியாவில் தமிழ் நாட்டின் பாண்டிச்சேரியை சேர்ந்த பிரபல மேடை பேச்சாளரும் சமூக
ஆர்வலருமான டாக்கடர் பிரமிளா தமிழ்வாணன் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்வில் புனித மரியாள் பாடசாலை மாணவிகளும் அவர்களின் தாய்மார்களும் பங்குகொண்டு பயன்பெற்றனர். இதன்போது
பாடசாலை அதிபர் வரவேற்புரை நிகழ்த்துவதையும்ரூபவ் கல்வி இராஜாங்க அமைச்சரின் ஊடக இணைப்பாளர் எஸ்.தியாகு
கருத்துரை வழங்குவதையும். மலையக மக்கள் முன்னணியின் இணை செயலாளர் ஜி.ஜெகநாதன் உரையாற்றுவதையும் டாக்டர்
பிரமிளா தமிழ்வாணன் கருத்தரங்கை நடாத்துவதையும் நிகழ்வில் கலந்துக்கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.
(அவிசாவளை நிருபர்)