புதிய நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வின் போது எதிர்கட்சி தலைவரின் ஆசனம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சபையின் கோரிக்கையை ஏற்று செயற்பட்டிருக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற ஊடகவியலாளர் எஸ்.மகாலிங்கசிவம் கூறியுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் முதல் நாள் அமர்வின் போது, எதிர்கட்சி தலைவரின் ஆசனத்தில் அர்ச்சுனா அமர்ந்தது தவறு கிடையாது.
எனினும், குறித்த ஆசனம் தொடர்பில் சபையினால் தெரியபடுத்தியதன் பிறகு அவர் அதனை ஏற்று செயற்பட்டிருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
ஆனால் அது நிகழாமையே நாடாளுமன்றத்தில் அன்று ஏற்பட்ட சலசலப்புக்கு காரணமாக அமைந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.