எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்த அனோஜனின் பெற்றோர்!

0
34

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் என்ற இலங்கைய வாலிபரின் பெற்றோர் இன்று (21) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வருகை தந்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தனர்

சிவராசா அனோஜனின் தந்தை தம்பிராசா சிவராசா, தாய் இராசமாணிக்கம் யோகலட்சுமி மற்றும் சகோதரன் சிவராசா ஹம்சிதன் உள்ளிட்ட குடும்ப அங்கத்தவர்கள் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

அவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு மத்தியில், சவூதிக்கான இலங்கை தூதுவர் அமீர் அஜ்வாட் அவர்களைத் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்ட சஜித் பிரேமதாச, அனோஜனின் விடுதலை தொடர்பில் நாடாக எம்மால் எடுக்க முடியுமான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடினார்.

மேலும், தற்போது சவூதி சிறைச்சாலையில் இருக்கும் சிவராசா அனோஜனுடன் தொலைபேசி ஊடாக உரையாடிய சஜித் பிரேமதாச, அவரது நிலைமைகள் குறித்து விசாரித்தறிந்ததுடன், பின்னர் இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜாவைத் தொடர்புகொண்டு, அது தொடர்பான சட்ட நிலரவரம் மற்றும் சிவராசா அனோஜனை விடுவிப்பதற்காக அரசாங்கம் இத்தருணத்தில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

வெளிநாட்டில் வசித்துக்கொண்டு தனது நாட்டுக்காக உழைப்பை அர்ப்பணித்த இலங்கையரான சிவராசா அனோஜனின் விடுதலைக்காக எடுக்க முடியுமான முடிந்தளவிலான உச்சக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும், சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்தை இதன்பால் தொடர்ச்சியாக முன்வைப்பதற்கும், அவரை விடுவித்துக்கொள்ளத் தொடர்ச்சியாக எனது ஆதரவையும் ஒத்துழைப்புகளையும் பெற்றுத் தருவேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது வாக்குறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here