எதிர்வரும் 25ம் திகதியின் பின்னர் நாட்டின் கிழக்கு பகுதியில் நிலவும் வரட்சியான காலநிலையில் மாற்றம் ஏற்படக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இரத்தினபுரி , களுத்துறை , காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில இன்று பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை பெய்யக்கூடும் எனவும் மேல் , சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்ட காலநிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை, நாட்டின் அநேகமான பகுதிகளில் தொடர்ந்தும் வறட்சியான காலநிலை நிலவும் என திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.