அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் 6ஆம் திகதி ஹர்த்தால் நடத்தப்படவுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.அரச , அரை அரச, தனியார் மற்றும் எஸ்டேட் துறைகளில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டு நாடு முழுவதும் ஹர்த்தாலில் ஈடுபடுவார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.
அன்றைய தினம் ஒவ்வொரு நகரத்திலும் கிராமப்புறங்களிலும் மக்கள் வீதியில் இறங்கி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளதாகவும் அதற்கான முறையான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.