முகநூலில் வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்விடயத்தை சுட்டிக்காட்டினார்.இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் முகநூலில் போலி கணக்குகளால் தன்னை பற்றி பல அவதூறுன விடயங்கள் பரப்பப்பட்டு வருகின்றன.இவை அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை.இவ்வாறான தகவல்களில் உண்மை தன்மை கிடையாது இது தன்மீது பழி சுமத்தவும் தனக்கு சமூகத்தில் இருக்கும் அந்தஸ்தத்தை சீர்க்குழைக்கும் விதத்திலேயே இவ்வாறான அவதூறும் போலி முகநூல்களை கொண்டு வதந்தி பரப்பப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவ்வாறு பரப்புபவர்களுக்கு எதிராக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.சபை தலைவர் என்ற ரீதியில் மிக பொறுமையாக இருக்கின்றேன் தொடர்ந்தும் இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொண்டால் விளைவை வேறு வகையில் சந்திக்க ஏற்படும்.இது தொடர்பாக பல தடவைகள் குறிப்பிட்டும் பயனில்லை.தான் எதும் தவறுகள் செய்திருப்பின் நேடியாகவோ அல்லது உண்மையான கணக்குகளிலூடாகவோ ஆதரத்துடன் தெரிவித்தால் தான் அதற்கு பதிலளிப்பதாகவும் பொய்யான முகநூல் கணக்குகளில் தன்னை சீண்டினால் அதன் பிரதிபலன் சட்டத்தின் ஊடாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் நுவரெலியா தவிசாளர் வேலு யோகராஜ் குறிப்பிட்டார்.
நீலமேகம் பிரசாந்த்




