நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்ட டெஸ்போட் தோட்டத்தில் 14.09.2017ம் திகதி இரவு எபொட்ஸ்போட் பாடசாலை, ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், டெஸ்போட் சிறுவர் பராமரிப்பு நிலையம் இனம் தெரியாத நபர்களால் உடைத்து பொருட்கள் களவாடப்பட்டுள்ளன.
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் எந்நவொரு பொருட்களும் எடுத்து செல்லப்படவில்லை. சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் கேஸ் அடுப்பு, கேஸ் சிலிண்டர் போன்றவற்றை களவாடப்பட்டுள்ளது மற்றும் பாடசாலையில் பாதுகாப்பாக வைத்திருந்த பொருட்கள் சிதறடிக்கப்பட்டிருந்தது.
அதை அறிந்த தோட்ட முகாமையாளர் அனுர திஸாநாயக்க அவர்கள் சென்று அவ்விடத்தை பார்வையிட்டு நுவரெலியா பிரதி பொலிஸ் அத்தியட்சகருக்கு தொலைபேசியின் மூலமாக அறிவித்த பின் உடனடியாக நானுஓயா பொலிஸாரும் மோப்ப நாய்களுடன் சென்று அவ்விடத்தை பரிசோதித்தனர்.
அவ்விடத்திலே தோட்ட முகாமையாளர் ஆலயம், சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு காவல் புரிவதற்கு ஒருவரை நியமிப்பிதாக உறுதியளித்தார்.
டீ. சந்ரு