எரிபொருட்களின் விலைக் குறைப்பு குறித்து பொது மக்கள் வாகன ஓட்டுநர்கள் மகிழ்ச்சி.

0
189
 சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைத்ததனை தொடர்ந்து டாலர்களின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளுத. இந்த மாற்றத்திற்கமைய அரசாங்கம் இன்று (29) திகதி நல்லிரவு முதல் எரிபொருட்களின் விலைகளை குறைப்பதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார்.
இதற்கமைய இன்று நல்லிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெற்றோல்,60 ரூபாவாலும், இதன் புதிய விலை 340 ரூபா 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.

மேலும் சுப்பர் டீசலின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 465 ரூபாவாகும்.ஒட்டோ டிசலின் விலை 80 ரூபாவல் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 325 ரூபாவாகவும் மண்ணெண்ணை 10 குறைக்கப்பட்டு புதிய 295 ரூபாவுக்கு விற்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொது மக்கள் சாரதிகள் மற்றும் வானக ஓட்டுநர்கள் என பலரும் கருத்து தெரிவித்தனர். எரிபொருள் விலை குறைப்பானது உண்மையிலே பொது மக்களுக்கு மகிழ்ச்சிக்குரிய விடயம் ஏனென்றால் பொது மக்கள் பொருளாதா ரீதியாக பாதிக்கப்பட்டு மிகவும் கஸ்ட்டத்திற்கு மத்தியிலேயே வாழ்கின்றனர். இந்நிலையில் இந்த விலை குறைப்பானது மக்களுக்கு ஓரவு ஆதரவளிக்கும் அதே நேரம் எரிபொருட்களின் விலை குறைப்புடன் ஏனைய பொருட்களில் விலையும் குறைவடையும் என தெரிவித்தனர்.

இது குறித்து வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கருத்து தெரிவிக்கையில் இன்று பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த விலை குறைப்பானது மக்களுக்கு மகிழ்ச்சியைத்தரும் இந்த அரசாங்கம் இப்போது பொது மக்கள் விடயங்களில் கலனம் செலுத்துவதனையிட்டு நாங்கள் சந்தோசமடைகின்றோம். அதே போது போக்குவரத்து மற்றும் அத்தியவசிய பொருட்களின் விலைகளையும் அரசாங்கம் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

முச்சரக்கர வண்டி சாரதிகள் கருத்து தெரிவிக்கையில் இந்த விலை குறைப்பு மகிழச்சிக்குரிய விடயமாக இருந்தாலும் இதற்கமை கட்டணங்களை குறைக்க முடியாது. இந்த விலைக்குறைப்பு போதுமானாதாக இல்லை. இதே நேரம் உதிரப்பாகங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் விலையும் குறைவடைந்தால் நாங்கள் கட்டணங்களை குறைத்து அறவிடலாம்.
இன்று நாங்கள் பொருட்களின் விலையேற்றம் காரணமாக கடும் கஸ்ட்டத்திற்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகிறோம்.எங்கள் வருமானம் பிள்ளைகளின் தேவைகளையும் குடும்பத்தினை கொண்டு செல்வதற்குமே சரியாக உள்ளது. இந்நிலையில் எங்களுக்கு கட்டணங்களை குறைத்து அறவிட முடியாது. எரிபோருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக இன்று எங்களுக்கு சவாரிகளும் குறைந்து தான் உள்ளன எனவே எரிபொருள் விலையேற்றம் காரணமாக அதிகரிக்கப்பட்ட அனைத்து பொருட்களும் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பலரும் தெரிவித்தனர்.

எது எவ்வாறான போதிலும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக அனைத்து அத்தியவசிய மற்றும் மின் கட்டணம் தண்ணீர்,தொலைபேசி போக்குவரத்து உள்ளிட்ட உயர்த்தப்பட்ட அனைத்தையும் மீண்டும் குறைக்கப்பட்ட வீதத்திற்கமைய குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் கடமையும் பொறுப்பும் ஆகும் என பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here