எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் பெற்றறோல் தட்டுப்பாடு: சாரதிகள் பெரும் அவதி.

0
120

பெட்ரோல், டீசல் விலை உயர்வின் பின்னும் தேவைக்கேற்ற விநியோகம் இல்லை வாகன சாரதிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியாவில் இன்றும் காலை முதல் டீசல் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது, நானுஒயா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் மாத்திரம் வினியோகம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது

ஒவ்வொரு வாகன சாரதிகளும் எரிபொருள் நிரப்புவதற்காக முண்டியடித்துக் கொண்டு வாகனங்களைக் கொண்டு செல்ல முற்பட்டதன் காரணமாக நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் நுவரெலியா – பதுளை பிரதான வீதியினை ஒருவழிப்பாதையாக மாற்றியுள்ளனர்
வாகனம் சாரதிகளுக்கு மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் நுவரெலியா போக்குவரத்து பொலிசார் அறிவுறுத்தி வருகின்றன

அத்துடன் வாகன சாரதிகள் நீண்டதுரம் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மரககறி வகைகளை கொண்டுசெல்வதில் பெரிதும் சிரமங்களை எதிர்கொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here