எல்ல பகுதியை சேர்ந்த தோட்ட முகாமையாளர்களுடன் செந்தில் தொண்டமான் அவர்கள் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இக் கலந்துரையாடலின் போது தங்கள் தோட்டங்களில் வசிக்கும் முதியவர்களை கோவிட் தடுப்பூசி மையத்திற்கு அழைத்து செல்ல தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து கொடுக்குமாறும், பெருந்தொட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தடுப்பூசி திட்டத்தை முழுமையாக அம்மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று அவர்களுக்கு வலியுறுத்தினார்.