நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ அவர்கள் சமர்ப்பித்துள்ள வரவு செலவு திட்டம் பல்வேறு முன்னேற்றகரமான பல்வேறு விடயங்களை கொண்டுள்ளன. ஆகவே எவர் எந்த வகையில் விமர்சித்தாலும் நடைமுறைக்கு பொருத்தமான வரவு செலவு திட்டமாக இது காணப்படுவதனால் நாங்கள் இந்த வரவு செலவு திட்டத்தினை வரவேட்கிறோம்.
என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் சிரேஸ்ட்;ட உப தலைவர்களில் ஒருவருமான கணபதி கணகராஜ் தெரிவித்தார்.வரவு செலவு திட்டம் தொடர்பாக இன்று (17) ஹட்டனில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்….
மலையக மக்களை பொருத்த வரையில் அவர் குறிப்பிட்ட முக்கியமான விடயம் தோட்ட தொழிலாளர்கள் அரசாங்கத்திற்கு சுமையில்லாமல் இருப்பவர்கள். என்று குறிப்பிடப்பட்டது மட்டுமல்லாமல் வீடமைப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேலதிகமாக (லயன்) தொடர்குடியிருப்புக்களை இல்லாது ஒழிப்பதற்காக 500 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளார்.
இதனை பல்வேறு தரப்பினர் பல்வேறு விதமாக விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்கள். இது வரை காலமும் இந்திய அரசு நன்கொடையாக வழங்கிய 4000 வீட்டுத்திட்டத்தினை வைத்துக்கொண்டு அரசியல் செய்தவர்கள் இந்த 500 மில்லியன் ரூபா போதுமா என்று கேட்கிறார்கள். இவர்கள் நல்லாட்சி காலத்திலே ஐந்து வருடங்கள் ஆட்சி செய்த போது ஒரு வருடத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் நிதியினை கொண்டு 500 வீடுகள் அமைத்திருந்தாலும் ஐந்து வருட காலப்பகுதியில் 2500 வீடுகள் அமைத்திருக்க வேண்டும்.அவ்வாறு செய்யாதவர்கள் இந்திய அரசாங்கத்தின் வீடமைப்பு திட்டத்தினை வைத்துக்கொண்டு பெசில் ராஜபக்ஸ அவர்களின் வரவு செலவு திட்டத்தினை விமர்சிப்பது வேடிக்கையாக இருக்கிறது.
அந்த வகையில் நாங்கள் வரவு செலவு திட்டத்திற்கு அப்பாற் சென்று பல்வேறு வேலைத்திட்டங்களை முன்வைத்திருக்கிறோம். பல்வேறு பிரச்சிகைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன குறிப்பாக உதவி ஆசிரியர்களின் நியமனம் மத்திய மாகாணத்தில் 200 பேருக்கு நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதிலும் அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் தலைமையில் பேசுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம. என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.
கே.சுந்தரலிங்கம்.