ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை விவகாரம் தொடர்பில் செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் உள்விவகாரங்களில் புறச் சக்திகளின் தலையீடு ஆரோக்கியமானதாக அமையாதென சீனா சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பரிந்துரைகள் புதிய போராட்டமொன்றை வெடிக்கச் செய்ய வழியமைத்து விடக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையுடன் புதிய திட்டங்களை முன்னெடுக்க விரும்புவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் யீ ஸியான்லியாங் தெரிவித்துள்ளார்.
இலங்கையுடன் சீனா பேணி வரும் உறவுகளில் எவ்வித உள் நோக்கமும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடுகளுக்கு இடையிலான கூட்டு அபிவிருத்தி ஏனைய முரண்பாடுகளை களையும் வகையில் அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
உதாரணமாக சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான கூட்டு நடவடிக்கைகள் எல்லைப் பிரச்சினைகளை தடுக்கும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.