ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் இ.தொ.கா.விற்கு ஆதரவு வழங்கபோவதாக அறிவிப்பு.
இடம் பெற்று முடிந்த உள்ளுராட்சிசபை தேர்தலின் பின் நுவரெலியா மாவட்டத்தில் 11சபைகளை ஆட்சி அமைக்கும் நோக்கில் இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் பொதுச்யெலாளருமான ஆறுமுகன் தொண்டமானுக்கும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ் சதாசிவம் ஆகியோருக்குமிடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் அதன் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களோடு 05.03.2018.திங்கள் கிழமை இடம் பெற்ற கலந்துரையாடலின் போது இந்த முடிவு எட்டபட்டுள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.சதாசிவம் குறிப்பிட்டார்.
உள்ளுராட்சி சபைகளில் எதிர்காலத்தில் எவ்வாறான வேலைதிட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் எவ்வாறு இதனை கொண்டு செல்வது தொடர்பான பேச்சுவார்த்தையில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களோடு கலந்துரையாடி ஆராய பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேலை தமிழ் கட்சிகள் ஒன்றினைந்து ஒரு உள்ளுராட்சி சபையினை ஸ்தாபிக்க முடியுமென்ற வகையில் ஜக்கிய மக்கள் கட்சி முழுமையான ஆதரவினை வழங்க இருப்பதோடு இது தொடர்பான பேச்சிவார்த்தைகள் இ.தொ.கா.தலைவரம் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களோடும் அவரின் குழுவினரோடும் பேச்சிவார்த்தை முடிவடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேலை இலங்கை தொழிலாளர் காங்ரசுடன் இணைய போவதாக தகவல்கள் வெளியாகிஇருக்கின்றமை தொடர்பில் மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.சதாசிவத்திடம் கேள்வி எழுப்பியபோது.
நான் காட்சி மாறபேவதில்லை இதற்கு முன்பு நான் இலங்கை தொழிலாளர் காங்சுடன் இனைந்து நான் செயல்பட்டேன் ஆனால் அதற்கு பிறகு நான் தனி கொள்கையோடும் தனி கட்சியோடும் செயல்பட்டு வருவதாகவும் அப்படி நிலமை இடம் பெறாது யெனவும் குறிப்பிட்டார்.
(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)