ஐசிசி உலகக்கிண்ணம் 2023: இறுதி அட்டவணை இன்று வெளியீடு!

0
174

அரையிறுதிப் போட்டிகள் மும்பை மற்றும் கொல்கத்தாவில் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐசிசி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை இன்று வெளியாகும் நிலையில், அரையிறுதிப் போட்டிகள் மும்பை மற்றும் கொல்கத்தாவில் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2023 ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர், இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளன. இதன் போட்டி அட்டவணைகள் குறித்து ஆர்வத்துடன் பலரும் விரிவாக பேசி விவாதித்து வந்தனர்.

அரையிறுதிப் போட்டிகள், சென்னை மற்றும் பெங்களூருவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், மும்பை மற்றும் கொல்கத்தாவில் அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே திட்டமிட்டமிட்டவாறு இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான இறுதி அட்டவணை இன்று வெளியாகிறது.

இதனிடையே, முதல்முறையாக உலகக்கிண்ண அறிமுக நிகழ்ச்சி, விண்வெளியில் நடைபெற்றது.

சிறப்பு பலூனில் விண்வெளிக்கு உலகக்கிண்ணம் அனுப்பப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தரையிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here